ஜெகமதி கல்வி அறக்கட்டளை
மிகச் சிறந்த கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்து அவர்களுடைய அறிவையும் வியப்புணர்வையும் மேம்படுத்தும் சீரிய நோக்கத்தைத்தான் காவியன் நிறுவனத்தின் கல்விப் பிரிவான ஜெகமதி கல்வி அறக்கட்டளை கொண்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் உள்கட்டுமான வசதிகளை விரிவாக்கி, பகுப்பாயும் திறன் மற்றும் அக்கறை எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு உடைய கல்வியாளர்களை நியமிப்பதின் மூலம் கல்வியின் மிக நேர்த்தியான தன்மையை இயல்பாக உருவாக்க வேண்டும் என்று அறக்கட்டளை நம்புகிறது. சமூகத்தில் நலன்கள் குறைந்தவர்களுக்குச் சரியான திறமைகளையும் தன்மதிப்பையும் அவர்களுக்கு அளித்து அவர்கள் தங்கள் தற்பொழுதைய பொருளாதார நிலைமையில் இருந்து விடுதலை பெறுவதற்கு ஏற்ப சக்தி அளிக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவை என்பதை அறக்கட்டளை நம்புகிறது. தன் கல்விப்பணியில் அதன் நீண்ட பயணத்தை அறக்கட்டளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. 2009ல் திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மையநாயக்கனூரில் நிறுவப்பட்டுள்ள காவியன் பள்ளி ஒரு மிகச் சிறந்த பள்ளியாகும் – பார்த்தால்தான் அதன் சிறப்பை இன்னும் உறுதியாக நம்ப முடியும் என்ற அளவிற்கு அது உள்ளது. மிகத் தரமான கல்வியை அது பெயரளவுக் கட்டணத்திற்கு மட்டுமே கொடுக்கிறது. மேலும் அறக்கட்டளை விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி வட்டத்தில் உள்ள இருஞ்சிறை கிராமத்தில் அரசாங்க உயர் நிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலத்தை

நன்கொடையாக அளித்துள்ளது. ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவியபின்னரும் கூட அறக்கட்டளையின் கல்விப்பணி நின்று விடாது.


செய்திகள்
' தமிழர் பண்பாட்டு விழா ' காட்சியகம் காண இங்கே கிளிக் செய்யவும்